அமெரிக்காவில் இந்துக்களை கவுரவிக்கும் நோக்கத்தில் கணேஷ் கோயில் தெரு என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையால் அப்பகுதியில் உள்ள இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்கா, நியூயார்க் நகரின் வட மத்திய பகுதியில் குயூன்ஸ்7 கம்யூனிட்டி மாவட்ட பிளஷ்சிங் நகரில் ஹோலி அவன்யூ, 45வது அவன்யூ இடையில் அமைந்திருப்பது பௌனி தெரு. இங்கு இந்தியா, கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளின் கலாசார மையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளது. மேலும், வல்லப கணபதி தேவஸ்தானம் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான இந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்துக்களை கவுரவிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா அரசு, இந்த பௌனி தெருவுக்கு கணேஷ் கோயில் என பெயர் மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar