மனநோயாளியாக மாறிய இம்ரான் கான்: நவாஸ் ஷெரீப் மகள் மரியம் தாக்கு!

Update: 2022-04-09 12:14 GMT

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு புத்தி ஸ்வாதீனம் இல்லை என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் கடுமையாக தாக்கியுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை துணை சபாநாயகர் சுரி நிராகரித்தார். இதனை ரத்து செய்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி இன்று நாடாளுமன்றம் கூடியதும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் துவங்கியது. சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் இது பற்றி கூறும்போது, இம்ரான்கான் தற்போது புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் உள்ளார். இதனால் மனநோயாளியை போன்று செயல்பட்டு வருகிறது. தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் பிணைக்கைதியாக மாற்றி விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: India Tv News

Tags:    

Similar News