ஜப்பானில் பிரதமர் மோடி! எதற்காக இந்த பயணம் தெரியுமா?

Update: 2022-05-24 02:12 GMT

இந்தோ, பசுபிக் வளர்ச்சிக்கு குவாட் மாநாடு உதவும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்தார். இந்தியாவின் தொழில் வளர்ச்சியை மேற்படுத்தும் விதமாக ஜப்பான் நிறுவனங்களை சேர்ந்த 30 தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்.

இதனை தொடர்ந்து நாளை (மே 24) நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் இந்தோ, பசுபிக் பிராந்திய வளர்ச்சி உணவு பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் உக்ரைன் போர் விவகாரம் உட்பட பல பிரச்சினைகள் விவாதிகப்பட உள்ளது. ஜப்பான் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோ, பசுபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதாகவும், அது தொடர்பாக குவாட் மாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Tags:    

Similar News