பிரான்ஸ் நாட்டில் உள்ள சப்ரான் நிறுவனத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏச்.ஏ.எல். உடன் இணைந்து கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க இருக்கிறது.
இது குறித்து இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மேலும் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சப்ரான் நிறுவனம் சார்பாக அதிநவீன விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று (ஜூலை 5) சந்தித்துப் பேசிய சப்ரான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆலிவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar