ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையை கொண்டாடும் சீனர்கள்: வலுக்கும் கண்டனங்கள்!

Update: 2022-07-09 01:02 GMT

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலையை சீனர்கள் அவர்களின் சொந்த சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கொலையாளியை ஹீரோவாக சித்தரித்து அபே மரணத்திற்கு மனிதாபம் இன்றி வாழ்த்து கூறி வருகின்றனர். சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் நீண்டகாலமாக மோதல் போக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது இரண்டு நாடுகளும் மாறி, மாறி விமர்சனம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஜப்பானில் தேர்தல் பிரசாரத்தின்போது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை மர்ம நபர் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டதில், அவர் சுருண்டு விழுந்தார். அதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த படுகொலையை சீனாவில் அவர்களின் சமூக வலைதளங்களில் சீன மக்கள் கொண்டாடி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சீனாவின் அரசியல் கார்ட்டூனிஸ்ட் படியுகவோ என்பவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில், அவரது அறிக்கையில், அபே மரணத்தை சீனர்கள் கொண்டாடி வருவதையும், கொலையாளியை ஹிரோவாக சித்தரித்து புகழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளளார். சீனர்களின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு முன்னாள் பிரதமரை ஒருவர் படுகொலை செய்திருப்பதை கண்டனம் தெரிவிக்காமல் ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News