இலங்கை அதிபர் கோத்தபயாவை இந்தியாவில் தரையிறங்க அனுமதிக்காத மத்திய அரசு: பரபரப்பு தகவல்!
இலங்கை நாட்டின் அதிபர் கோத்தபயாவை இந்தியாவில் தரையிறங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிபராக இருந்தவர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோருக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்தது. அதிலும் பெட்ரோல், டீசல் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இதனை கண்டித்து இலங்கை மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த மாதம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய குடும்பத்தாருடன் தலைமறைவானார். அதே போன்று அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கும் எதிரான போராட்டம் தீவிரமடைந்ததால் அவர் தனது குடும்பத்தாருடன் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தார்.
கோத்தபயாவை இந்தியாவில் தரையிறங்க அனுமதிக்காத மத்திய அரசு.. வெளியான தகவல்! #SriLanka #GotabayaRajapaksa #Maldives #india pic.twitter.com/UE6lm6nTLK
— Polimer News (@polimernews) July 13, 2022
இதற்கிடையில் விமானம் மூலமாக வெளிநாடு தப்பிசெல்வதற்கு ஒவ்வொரு நாட்டின் உதவிகளையும் கோரி வருகிறார். ஆனால் இலங்கையின் அண்டை நாடுகள் அவரது வருகைக்கு அனுமதி அளிக்கவில்லை. அதே போன்று இலங்கை அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையில் இருந்து துபாய் அல்லது மாலத்தீவு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
அதற்கு இடையில் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோத்தபயா சென்றபோது இந்தியாவில் விமானம் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது விமானம் மாலத்தீவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
Source: Polimer
Image Courtesy: Ndtv