பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் - இலங்கை போன்று போராட தயாராகும் பாகிஸ்தான் மக்கள்

Update: 2022-07-14 13:04 GMT

இலங்கையில் ஏற்பட்டதை போன்று தற்போது பாகிஸ்தானிலும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. நமது நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் அன்னியச் செலாவணி இருப்பு ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு கடனை திரும்பத் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அமெரிக்க டாலரை கடனாக பெற்று சமாளித்து வருகிறது.

மேலும், சர்வதேச நிதியம் பாகிஸ்தானிற்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் பணம் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து அன்னியக் கடன்களை திரும்பச் செலுத்த பாகிஸ்தான் கடந்த மாதம் சீனாவிடம் அதிகமான வட்டிக்க டாலரை வாங்கியது. இந்தியா ரூபாயில் சொல்ல வேண்டும் என்றால் 17 ஆயிரத்து 250 கோடியை பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து அதிகமான வட்டிக்கு வாங்கியுள்ளது.

எனவே அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவு மற்றும் விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் நோட்டு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. வருகின்ற மாத்திலேயே அன்னியக் கடன்களை திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடியும் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் இலங்கையை போன்று அனைத்து பொருட்களும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. விரைவில் போராட்டத்திற்கு தயாராக மக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source: Dinamalar

Image Courtesy: The Jerusalem Post

Tags:    

Similar News