மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கிறிஸ்தவர்களின் செயலுக்கு வெட்கப்படுகிறேன்: பழங்குடியின மக்களிடம் போப் வருத்தம்!

Update: 2022-07-27 00:38 GMT

கனடாவில் கடந்த 19ம் நூற்றாண்டில் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று போப் திடீரென்று கூறியிருப்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1800 முதல் 1900 வரையில் கனடா அரசானது பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 1,50,000 குழந்தைகளை வலுக்கட்டாயமாக குடும்பம், கலாசாரம் மற்றும் மொழி உள்ளிட்வைகளில் இருந்து பிரித்து கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

அந்த சமயத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். இதனால் மாணவர்களுக்கு போதுமான உணவு மற்றும் எதுவுமே கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இது வாடிகனை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், கனடாவிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: உங்களிடம் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடியின மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை அழிப்பதற்கு காரணமாகிவிட்டது. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த மிகப்பெரிய கொடூர செயலுக்கு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்கிறேன். இது பழங்குடியின மக்களுக்கு ஒரு சிறிய மருந்தாகும். இவ்வாறு போப் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News