ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோயிலை ஆக்கிரமித்த கிறிஸ்தவர்கள்! மீட்கப்பட்டதா?

Update: 2022-08-06 06:19 GMT

பாகிஸ்தான் : 'நாங்கள் ஹிந்துக்கள் தான்' என்று கூறி ஹிந்து கோயில் சொத்தை கிறிஸ்துவ குடும்பத்தினர் அனுபவித்து வந்தனர். பின் அவர்களிடமிருந்து கோவில்  மீட்கப்பட்டது.


இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் பாகிஸ்தானில், பல பழமை வாய்ந்த ஆன்மிக சிறப்பு கொண்ட ஹிந்து கோயில்கள் இன்றும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் அனார்கலி பஜார் என்ற இடத்தில் , சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 'வால்மீகி கோயில்' ஒன்று உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்று 'நாங்களும் ஹிந்துக்கள் தான்' என்று கூறி அக்கோயிலை ஆக்கிரமித்து, கோயில் சொத்துக்களை அனுபவித்து வந்தனர். மேலும் இந்துக்களை அக்கோயிலில்  வழிபட விடாமல் தடுத்தும் வந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் கோயில்கள் பராமரிப்பு அறக்கட்டளை வாரியம் சார்பில்,  நீதிமன்றத்தில் இந்த ஆக்கிரமிப்பு குறித்து  வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில்  அறக்கட்டளை சார்பாக நீதிமன்றம்  தீர்ப்பளித்ததுள்ளது. இதனையடுத்து அக்கோயிலில் ஹிந்துக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


துணைக் கண்டத்தில், இதேபோல் பல ஆன்மிக சிறப்பு மற்றும் பழமை வாய்ந்த ஹிந்து கோயில்கள் பல தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Dinamalar

Tags:    

Similar News