கனல் கண்ணன் கைதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி அமைப்பு நடத்தியது.
இந்து கோயில்கள் முன்பு நிறுவப்பட்டிருக்கும் ஈ.வே.ரா சிலை குறித்து கருத்துக் கூறியதற்காக, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகியான கனல்கண்ணனை தமிழக காவல்துறை கைது செய்தது. இவரது கைதை தமிழக மக்கள் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்துமுன்னணி அறிவித்திருந்தது. அதேபோல் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல பகுதியில் கனல்கண்ணன் கைதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
அதன் வரிசையில், திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு காவல்துறை ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி இந்து முன்னணி மாநில தலைவரை கைது செய்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் "தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கிறதா?சர்வாதிகார நடவடிக்கையால் உண்மையை மறைக்கலாம் என்று தமிழக அரசு நினைத்தால் இந்துக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
என்று பதிவிட்டுள்ளது.