ஏன் ஈஷா மையத்திற்கு விளக்கு அளித்துள்ளீர்கள்? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி?

Update: 2022-09-28 01:45 GMT

ஈஷா யோகா மையத்திற்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்ததற்கான விளக்கத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் ஒரு மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு ஆன்மீக அமைப்பாகும், இருந்து வருகிறது. நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எல்லைகள் தாண்டி இலட்சக்கணக்கான மக்கள் இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆதரவுடன் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பல்வேறு சமூகநில திட்டங்களையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளையிடம் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஈஷா மையத்திற்கு எதிராக நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அந்த விசாரணையில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு ஏன் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த வாதத்திற்கு பின்னர், பேசிய நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என கேள்வி எழுப்பியதுடன் ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பகுதியின்கீழ் கொண்டு வரப்பட்டன? என விளக்கம் கேட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைத்துள்ளது.



Source - Maalai malar

Tags:    

Similar News