போதைப் பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய மோடி அரசு... இதில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

Update: 2023-06-27 03:35 GMT

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட செய்தியில், போதைப் பொருளுக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களுக்கும் அமைப்புகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த முறையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தேசிய அளவில் ‘போதைப் பொருள் ஒழிப்பு இருவார நிகழ்வுக்கு’ ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும் என்று அவர் கூறியுள்ளார்.


இந்தியாவில் போதைப் பொருள் வணிகத்தை அனுமதிப்பதில்லை என்பதைப் போலவே இந்தியா மூலமாக உலகத்திற்கு போதைப் பொருள் கடத்துவதையும் அனுமதிப்பதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 2006-13 காலத்தில் ரூ.768 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2014-22 காலகட்டத்தில் ரூ.22,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இது போதைப் பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய மோடி அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான இயக்கம் 2022 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு இதுவரை நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் கிலோ கிராம் போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்தார். போதைப் பொருளிலிருந்து விலகியிருக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், போதைப் பொருள்கள் இளைய தலை முறையையும் சமூகத்தையும் சீரழிப்பது மட்டுமின்றி போதைப் பொருள் கடத்தலால் ஈட்டப்படும் பணம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News