இந்தியா-பிரான்ஸ் இடையே வலுவான உறவு... பிரதமர் மோடிக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு...

Update: 2023-07-14 04:33 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில் ஜூலை 13 முதல் 14 வரை அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் செல்கிறேன். நான் அதிபர் மேக்ரானுடன் பாரீஸில் நடைபெறும் ‘பிரான்ஸ் தேசிய தினம்’ அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதால், இந்தப் பயணம் சிறப்பு வாய்ந்தது. பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய முப்படை அணி பங்கேற்பதோடு, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.


இந்தாண்டு இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் வேரூன்றியுள்ள இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, கடல்சார் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


இந்த நீண்டகால மற்றும் காலத்தால் அழியாத கூட்டாண்மையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வது குறித்து அதிபர் மேக்ரானை சந்தித்து விரிவான விவாதங்களை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த 2022-ம் ஆண்டு எனது கடைசி பிரான்ஸ் பயணத்திற்குப் பிறகு, மிக சமீபத்தில் மே 2023-ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி -7 உச்சிமாநாட்டின் போது அதிபர் மேக்ரானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்று பிரதமர் கூறிய வார்த்தைகளை பிரதமர் அலுவலகம் அறிக்கையாக அளித்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News