சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ அனுப்பும் விண்கலம்.. தலைநிமிரும் இந்தியா..

Update: 2023-08-01 02:18 GMT

விண்வெளி துறையில் இந்தியா நம்ப முடியாத பல்வேறு சாதனைகளை தற்போது பிரதமர் மோடி தலைமையில் படைத்து வருகிறது. குறிப்பாக விண்வெளி துறையில் தனியாருக்கு கதவுகள் திறந்து விடப்பட்ட பிறகு பல்வேறு புதிய, புதிய முயற்சிகள் இஸ்ரோ தரப்பில் இருந்து செய்யப்பட்ட வருகிறது. குறிப்பாக சிங்கப்பூருக்காக இஸ்ரோ மேற்கொண்டுள்ள பிரதிகள் மின்கலமாக PSLV C-56 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கிறது.


இது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைக்கோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டப்பட்டு இருக்கிறது. இது சிங்கப்பூர் நாட்டினருக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மீதான நம்பகத்தன்மையை காட்டுகிறது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார். இந்த பயணத்தின் மூலம் விண்வெளி குப்பைகளை குறைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது.


குறிப்பாக ராக்கெட்டின் நான்காவது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்று பாதை கொண்டு வரப்படும். அது மட்டும் கிடையாது விண்வெளியில் சேரும் குப்பைகளின் அபாயத்தை குறைக்க இஸ்ரோ பயனுள்ள பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அடுத்த ஏவுதல் ஆதித்யா L1 ஆகஸ்ட் இறுதியில் செப்டம்பர் தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இது சூரியனைப் பற்றி ஆய்வு செய்யும் விண்கலமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News