விமானப் போக்குவரத்துத் துறை. இந்தியாவும், நியூசிலாந்தும் இணைந்து பிரம்மாண்ட ஒப்பந்தம்..

Update: 2023-08-30 05:09 GMT

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா- நியூசிலாந்து அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது புதிய வழித்தடங்களின் திட்டமிடல், குறியீடு பகிர்வு சேவைகள், போக்குவரத்து உரிமைகள் மற்றும் திறன் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா மற்றும் நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை, வேளாண்துறை, உயிரிப்பாதுகாப்பு, நிலத் தகவல், ஊரக சமுதாயத்தினர் நலத் துறை அமைச்சர் திரு டேமியன் ஓ' கானர், ஆகியோர் முன்னிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து தூதர் டேவிட் பைன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


மே 1, 2016 அன்று ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை தொடர்பான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து நியூசிலாந்து அரசும், இந்திய அரசும் மறுஆய்வு செய்துள்ளன. இன்று கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் விமானப் போக்குவரத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து விமான நிறுவனம் இந்தியாவில் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு இடங்களுக்கும் எத்தனை சேவைகளையும் இயக்கலாம்.


இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான சிவில் விமானப் போக்குவரத்துக்கு இன்று ஒரு முக்கியமான நாள். இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அம்சங்களை ஏற்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். வெளிப்படையான வான் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News