தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லையா?? அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்!

By :  G Pradeep
Update: 2025-10-12 07:32 GMT

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் கூட தொடர்ச்சியாக குற்றங்கள் நடத்தப்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுகுறித்து போலீசார் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் 59 34 ஆக இருந்த எண்ணிக்கை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 50.71% அதிகரித்துள்ளதாக கூறினர். 

பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு 8501 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 8094 ஆக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 82 பெண்கள் பாலியல் முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 இது மட்டுமல்லாமல் குழந்தைகளும் இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 6064 என இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 6968 ஆக உயர்ந்தது. போக்சோ வழக்குகளில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

என்னதான் தமிழக அரசு பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தாலும் கூட அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களும், ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் தான். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் தயக்கம் காட்டுவதால் தொடர்ச்சியாக இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. 

Tags:    

Similar News