கரூர் சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற அதிரடி உத்தரவு!!

By :  G Pradeep
Update: 2025-10-13 15:26 GMT

கரூர் தாவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து அக்கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தாவெக உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில் தங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக்களை முன் வைத்ததாக கூறப்பட்டது. 

அது மட்டுமல்லாமல் சம்பவம் நடந்த பொழுது தாவெக தலைவர் விஜய் தப்பித்து ஓடி விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது தவறானது என்றும், போலீஸ் அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தான் விஜய் அந்த இடத்திலிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எஸ்.ஐ.டி விசாரணை வேண்டாம் என்றும், உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் விசாரித்தது ஏன்? எதற்காக இந்த இரண்டு விசாரணை? என தொடர்ச்சியாக கேள்வியை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் சிறப்பு விசாரணை குழு இருப்பதாகவும், இதில் சந்தேகிக்கும் படி ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இதற்கான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு சரியான நீதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News