திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு அமைப்பதற்கு நான்கு மாதம் கெடு!! உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

By :  G Pradeep
Update: 2025-10-14 12:48 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு இல்லை என்றும், இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலுக்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைத்திருக்க வேண்டும். இந்த ஐந்து நபர்களில் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

இதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் அறநிலையத்துறை சார்பில் அறக்காவலர் குழு தலைவர் ஏற்கனவே நியமனம் செய்து விட்டதாகவும் தற்பொழுது குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருவதால் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து நீதிபதி அறக்காவலர் தலைவர் நியமித்து ஓராண்டு ஆன நிலையிலும் எதற்காக குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யவில்லை என்று தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்பினார். மேலும் விரைவில் இதற்கான பணி நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

மேலும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் நான்கு மாதத்திற்குள் அறங்காவலர் குழுவை நியமிக்கும் பணி முடிக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் நீதிமன்றமே அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்யும் என்று தீர்ப்பளித்தனர். 

Tags:    

Similar News