டாஸ்மார்க் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் செயலை கண்டித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!!
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு டாஸ்மார்க் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த சோதனையை எதிர்த்து வாதாடிய தமிழக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று தெரிவித்தது. மேலும் ஒரு அதிகாரி செய்த தவறுக்காக அத்துமீறி அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் வந்து அங்கிருக்கும் கோப்புகளைப் பறிமுதல் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் 40 மணி நேரம் ஊழியர்களை அடைத்து வைத்து தனிப்பட்ட தரவுகளை கைப்பற்றியது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் அளித்த பதிலில் டாஸ்மாக்கில் சட்ட விரோதமான பணமாற்றம் மற்றும் மண்டல அளவில் பணம் பெற்று பணி அமர்த்துதல் போன்றவை நடைபெற்று வந்ததாகவும் அதனால்தான் சோதனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சந்தேகம் இருந்தால் எந்த அரசு அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கூட்டாட்சித் தத்துவத்தை ஏன் மீறுகிறீர்கள்? சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று தொடர்ச்சியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழாக்க துறையின் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டம் தொடர்பான வழக்கை மறு ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.