தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்றால் உடனே இத பண்ணுங்க!!

By :  G Pradeep
Update: 2025-10-15 08:05 GMT

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் வசதி தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அமைந்திருக்கும் கழிப்பறைகள் சுத்தமாக வைத்திருக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிப்பறைகள் குறித்து புகார் அளித்தால் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசமாக செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இதன்படி அசுத்தமாக இருக்கும் கழிப்பறைகளை நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட புகைப்படம் புடித்து ராஜ்மார்க்யாத்ரா என்ற செயலியில் பதிவிட வேண்டும்.

 மேலும் அந்தப் புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்த வரின் பெயர், இடம், வாகனப் பதிவு எண் (VRN) மற்றும் மொபைல் எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். இதில் ஒரு நாளைக்கு ஒரு புகார் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், நகல் அல்லது ஏற்கனவே புகாரளிக்கப்பட்ட படங்கள் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அளிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் சரிபார்த்து உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு பயனர் வழங்கிய VRN உடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யவோ அல்லது எடுக்கவோ முடியாது என்றும், சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது பாஸ்டேக்கில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திட்டமானது பெட்ரோல் நிலையங்கள், தாபாக்கள் அல்லது NHAI கட்டுப்பாட்டில் இல்லாத பிற கழிப்பறைகளுக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News