பிஎப் பணத்தை எடுக்கும் முறையில் சிறிய மாற்றம்!! தொழிலாளர்களே இனி கவலையே வேண்டாம்!!
டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 238-வது மத்திய அறங்காவலர் குழு கூட்டமானது மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற முடிந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் பிஎப் பணத்தை திரும்ப பெறுவதற்காக சில விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.
அதில் மருத்துவம், கல்வி, திருமணம், வீடு மற்றும் சில அத்தியாவசிய தேவைகளுக்காக தொழிலாளர்களின் பிஎப் பணத்தை 100% திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும், இதனால் 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிக எளிதாக அவர்களின் பணங்களை பெற உதவியாக இருக்கும்.
ஏற்கனவே இருந்த நடைமுறைகளின் படி 13 வகைகளில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது அவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து ஒட்டுமொத்தமாக பணம் பெறுவதற்கு சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது ஏற்கனவே இருந்த வழிமுறைகளின் படி தொழிலாளர்கள் பிஎப் பணத்தை திருமணம் மற்றும் கல்வி போன்ற காரணத்திற்கு சேமிப்பிலிருந்து மூன்று முறை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில் தற்பொழுது மாற்றப்பட்டு கல்விக்கு பத்து முறையும், திருமணத்திற்கு ஐந்து முறையும் எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தங்களுடைய சேமிப்பு பணத்தை 100% எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு குறைந்தபட்ச கால அளவு 12 மாதங்கள் என்று குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.