பிரதமராக இருப்பதற்கான புத்திசாலித்தனம் இல்லை!! ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க பாடகி!!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா இந்தியா மீது அதிகப்படியான வரி விதித்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக பேசி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு பயப்படுவதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பாப் பாடகி மேரி மில்பென் பதிலளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாடகி மேரி மில்பென் சுதந்திர தினத்தன்று இந்திய தேசிய கீதத்தை பாடி அனைவரையும் கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக தீபாவளி கொண்டாட்டத்திற்காக ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே என்ற பாடலை பாடு இந்தியர்கள் மனதில் இடம் பிடித்தார். 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி பாடகியை இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் பிரதமர் மோடி கடந்த 2023 ம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த பொழுது மேரி மில்பென் பிரதமரை வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் தன்னுடைய ஆதரவை பிரதமர் மோடிக்கு தெரிவித்து வந்தார். அவர் பேசிய வீடியோவிலும் பிரதமர் மோடியை நான் எதற்காக ஆதரிக்கிறேன்? இதற்காக இந்தியாவில் நடக்கும் விவகாரங்களை இவ்வளவு நெருக்கமாக பின்பற்றுகிறேன் என பலரும் கேட்கும்பொழுது ஒரே பதில் தான் எனக்கு இந்தியாவை பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியும் தன்னுடைய நாட்டின் மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் சிறந்த தலைவர் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி டொனால்ட் டிரம்பைப் பார்த்து மோடி பயப்படுவதாக தெரிவித்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாடகி, நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. பிரதமர் மோடி அவ்வாறெல்லாம் பயப்படவில்லை.
அவர் நீண்ட கால உத்திகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நலன்களை எப்படி மேம்படுத்துகிறாரோ அதேபோல மோடியும் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாட்டுத் தலைவர்கள் இவ்வாறு தான் செயல்பட்டு வருகின்றனர். நீங்களும் இப்படித்தான் செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால் இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கு உங்களிடம் புத்திசாலித்தனம் இல்லை என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் உங்களுடைய ஐ ஹேட் இந்தியா சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டு திரும்பி வருவது உங்களுக்கு நல்லது என்று கண்டித்துக் கூறியுள்ளார்.