தூத்துக்குடி துறைமுகத்தில் பிடிபட்ட தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகளை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்க வரி அதிகாரிகள் நடத்திய கண்காணிப்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் சீனத்துறை முகத்தின் நிங்பேவிலிருந்து கப்பலில் கண்டெய்னர்கள் வந்தடைந்தது.
அதில் இரண்டு கண்டெய்னர்களில் இன்ஜினியரிங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இருப்பதாக ஆவணங்களில் பதிவிட்டிருந்த நிலையில் அவற்றை அதிகாரிகள் சோதனை இடும் பொழுது சிலிக்கன் சீலென்ட்கன் என்னும் தகரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அவற்றை ஒட்டுவதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருள்கள் இருந்த நிலையில் அதற்குப் பின்னால் 8,400 அட்டை பெட்டிகளில் 5 கோடி ரூபாய் மதிப்புடைய சீனா பட்டாசுகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
இந்த பைப் வெடியில் இருந்து 288 ஷார்ட்கள் வானில் 200 மீட்டர் உயரத்திற்கு சென்று வெடிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் உட்பட நான்கு பேரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவான மும்பையை சேர்ந்த தொழிலதிபரை தேடி வருகின்றனர்.
மேலும் இதே போல மற்றொரு கப்பலில் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து விளையாட்டு பொருட்கள் மற்றும் ஷூக்கள் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில் அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 7 கோடியாகும். இவற்றை கடத்தி வந்தது யார் என்பது குறித்த விசாரணையும் தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது.