பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாட்டமா? கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் ஷெபாஸ் ஷரீப்!
நாடு முழுவதும் தீபாவளியை பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தன்னுடைய தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினார். உலகில் பல்வேறு இடங்களில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தீபாவளி இருளை நீக்கி வெளிச்சத்தின் வழியாக வெற்றியை தரும் என்றும், தீமையின் மீது நன்மையை ஆதரிப்பதற்காக கொண்டாடப்படுவதாக வாழ்த்து தெரிவித்தார்.
இது சமூகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தானின் மூத்த மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்து சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ராமர் மற்றும் லட்சுமணன் வேடமிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதற்கு இதுதான் சாட்சி என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானில் இதுவரை பல இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், இதுவரை எத்தனை இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் என்பது தெரியுமா என தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.