ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு வாய்ப்புள்ளதா?? பிறப்பிக்கப்பட்ட மறுசீலனை அறிக்கை!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை தற்போது வரை பூட்டி இருக்கும் நிலையில் கடலோர நகரங்களில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. அங்கு இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையின் நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டி கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் நிபுணர் குழு ஆலையை மீண்டும் திறப்பதற்காக முதல்வர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை பசுமை அடிப்படையில் மீண்டும் தொடக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி 30 சதவீத செப்பு மறுசுழற்சி உள்ளடக்கிய மாதிரியும், 15 சதவீதம் அபாயகரமான கழிவுகள் மற்றும் 40% குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழில்துறையில் நிலையான அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டு கடந்த கால உற்பத்தி முறையை பின்பற்றாமல் இருப்பதற்கான அறிக்கையாக உள்ளது.
இதன் மூலம் உள்ளூரில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். கோரிக்கைக்கு பல தரப்பிலிருந்து ஆதரவுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் மூலம் பசுமை மற்றும் பழுப்பு நிற தொழில் திட்டங்களின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கக்கூடிய மையமாக தற்பொழுது இருந்து வருகிறது.