ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகமா?? தாலிபன் அரசுடன் இந்தியா உறவு!!
இந்திய அரசு ஆப்கானிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்காக காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப பிரிவு முழுமையான தூதராக பிரிவாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்படி தூதரகம் அமைக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில் இந்தியா மீண்டும் ஆப்கானிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சரும், இந்திய வெளியுறவு அமைச்சரும் சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசி இது குறித்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளின் விவாதங்களில் காபூலில் இருக்கும் இந்திய பிரிவின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாலிபன் அரசு இன்னும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும் கூட இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படுவதற்கு தாலிபன் அரசு அனுமதிக்காது என்று முத்தகி உறுதியளித்துள்ளார். இது இரண்டு நாடுகளின் உறவு முறையில் புதிய தொடக்கமாக இருக்கும் என்று முத்தகியின் இந்திய சுற்றுப்பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.