வளர்ச்சியை நோக்கி செல்லும் இந்திய பொருளாதாரம்!! அடுத்த ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு!!
By : G Pradeep
Update: 2025-10-25 08:50 GMT
நடப்பு நிதி ஆண்டான 2025 - 26 ல் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவின் பொருளாதாரம் ஆனது 7.8% ஆக அதிகரித்து இருப்பதாக டெலாய்ட் இந்திய நிறுவனமானது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 6.7 சதவீதத்திலிருந்து 6.9 சதவிதமாக இருக்கும் என்று கூறப்பட்டதாகவும் தற்பொழுது அந்த கணிப்பை விட 0.3 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இருக்கும் நிலையில் தேவை மற்றும் சீர்திருத்தக் கொள்கைகள் நடப்பு ஆண்டில் அதிகரித்து வருவதால் அதனுடைய வளர்ச்சியும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் வளர்ச்சி அதிகரித்து வருவதைப் போல அடுத்த ஆண்டிலும் இது போன்ற வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக டெலாய்ட் கூறி வருகிறது.