தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு புதிதாக வரப்போகும் ரயில் பாதை!! ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

By :  G Pradeep
Update: 2025-10-25 10:33 GMT

சென்னை தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்க்கும் இடையில் ஏற்கனவே மூன்று ரயில் பாதைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்பொழுது புதிதாக நான்காவது ரயில் பாதை ரூ.757.18 கோடி​ செலவில் அமைப்பதற்கு திட்டம் தீட்டி ரயில்வே அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டு வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

 அப்படி இருக்கும் நிலையில் தினந்தோறும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் அந்த வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் மூன்று பாதைகள் மட்டும் இருப்பதால் தற்பொழுது புதிதாக நான்காவது பாதையை அமைக்க திட்டமிட்டு தெற்கு ரயில்வே ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை அளித்ததை தொடர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையில் இருக்கும் 30 கிலோமீட்டர் தொலைவில் ரூ.757.18 கோடி​ செலவில் புதிதாக நான்காவது ரயில் பாதை அமைக்க போவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தாம்பரம்- செங்கல்பட்டு பிரதான பாதையில் மின்சார ரயில்களும் விரைவு ரயில்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஏற்கனவே இருக்கும் 87% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து 136% உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தினால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் இடர்பாடுகளை தடுக்க முடியும். இதனைத் தொடர்ந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அதிகமாக பயன்பெறுவார்கள். இத்திட்டமானது ரயில் பயணிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News