செயற்கைக்கோள் வாயிலாக சிக்கிய புகைப்படம்!! சீனாவின் செயலால் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதட்டம்!!
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாகவே பிரச்சனை நடந்து வரும் நிலையில் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் போன்ற பகுதிகளை கைப்பற்றிக் கொள்வதற்காக தொடர்ச்சியாக சீனா முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கல்வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலால் கடந்த ஐந்து வருட காலமாகவே இரண்டு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவின் பிரதமர்கள் சந்தித்துக் கொண்ட பொழுது இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் இடப்பட்டு மீண்டும் இணைந்தனர். இந்நிலையில் லடாக் பகுதிக்கு அருகில் இருக்கும் பாங் காங் ஏரிக்கரையில் சீனா பிரம்மாண்டமான ராணுவ விமான இயக்குத்தலத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதை செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தற்பொழுது தெரியவந்துள்ளது.
அதில் வீரர்களின் முகாம், வெடிமருந்து சேமிப்பு கிடங்கு என பல வசதிகள் கொண்ட கட்டமைப்புகளும், அதிநவீன வசதிகள் கொண்ட விமான தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்புகள் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் இருப்பதால் வெகு தொலைவில் இருக்கும் எதிரிகளை எளிதாக இலக்கு வைத்து துல்லியமாக தாக்குவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் HQ9 ஏவுகணை அமைப்பையும் இங்கு அதுக்கு வைக்க சீனா திட்டமிட்டு இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த புவிசார் நிறுவனம்தான் இதனை முதலில் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்ற மற்றொரு தளத்தை திபெத்தின் பவுண்டி பகுதியிலும் சீனா கட்டி வருவதாகவும், இங்கு கட்டப்படும் தளம் இந்திய எல்லையில் இருந்து 56 கி.மீ தொலைவில் கட்டப்பட்டு வருவதாகவும், நியோமா விமான நிலையத்திற்கு நேர் எதிரே இதனை அமைத்திருப்பதாக தெரிய வருகிறது. தற்பொழுது இரண்டு இடங்களில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் சீனா மற்றும் இந்தியாவின் எல்லை பகுதியில் தொடர்ச்சியாக பதட்டம் நிலவி வருகிறது.