உன்னிகிருஷ்ணன் போற்றி அளித்த வாக்குமூலத்தைக் கொண்டு மீட்கப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட சபரிமலை தங்கம்!!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் தங்கவாசல் மற்றும் துவார பாலகர்களின் சிலை செய்வதில் தங்க மோசடி நடந்ததாக கண்டரியப்பட்ட நிலையில் விசாரணை நடத்துவதற்காக இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரிப்பதற்காக சபரிமலையின் உபயதாரரான உன்னிகிருஷ்ணன் போற்றியை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
சபரிமலை தங்க கவசத்தை செம்பு கலசம் என ரெஜிஸ்டரில் பதிவானதை தொடர்ந்து கோவிலின் முன்னால் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அலுவலரான முராரி பாபுவை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சபரிமலை கோவிலில் 476 கிராம் தங்கம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் இருக்கும் கோவர்தன் என்பவரின் நகை கடையில் விற்பனை செய்ததாக உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலத்தை தொடர்ந்து விசாரணை குழு அந்த நகை கடைக்கு சென்று அங்கிருந்த 400 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றப்பட்டது.
அக்கடையின் உரிமையாளர் மீது நடந்த விசாரணையின் அடிப்படையில் உரிமையாளர் சபரிமலை தங்கம் திருடு போனதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், தங்கத்தை தான் வாங்க மட்டும்தான் செய்ததாக தெரிவித்தார். இருந்தாலும் கூட அவர் மீதும் தற்பொழுது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து உண்ணிகிருஷ்ணன் வீட்டில் இருந்து இரண்டு தங்க நாணயங்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை வரும் 30ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி தங்கம் கொள்ளை குறித்த கூடுதல் தகவலை விசாரணை குழு விசாரணை நடத்தவும், அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.