தவாக கட்சித் தலைவர் வேல்முருகன் கொடுத்த அதிரடி பேட்டி! அதிர்ந்து போன திமுக!!
வரும் 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கட்சி கடந்த எட்டு வருட காலமாக தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகளை உடையாமல் பார்த்துக் கொண்டு வருகிறது.
இந்த கூட்டணி கட்சிகளின் துணையோடு கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் திமுக வெற்றி பெற்றது. இதே போல வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலையும் வெற்றி பெற நினைத்து செயல்பட்டு வருகிறது. அதேசமயம் மறுபக்கம் அதிமுகவும் பாஜகவுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது.
மேலும் அதிமுக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் இணைப்பதற்காக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் தாவாக கட்சி கடலூர், திண்டிவனம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் மெஜாரிட்டி கொண்ட கட்சியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான வேல்முருகன் செய்தியாளர்களிடம் சட்டமன்றத்தில் தான் பேசுவது வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், தான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உட்பட யாராலும் பதில் அளிக்க முடியவில்லை என்றும், ஐந்து ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பேசியதை மக்களிடம் கொண்டு சென்றால் எங்களின் கட்சி தமிழக அரசியலில் அசைக்க முடியாத கட்சியாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு அதிகமான போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் தமிழீழ படுகொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கையிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தவும், அதிமுக ஆட்சியில் எடுத்த திருமணத்தை தற்பொழுது வாசித்துக் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.