இணையத்தில் கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்களை பதிவேற்றுவதில் என்ன சிக்கல்? இந்து அறநிலையத்துறை விளக்கம்!

By :  G Pradeep
Update: 2025-10-30 08:43 GMT


சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களின் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் டி ஆர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தில் இருக்கும் கோவில்கள் குறித்த டென்டர்கள் மற்றும் ஒப்பந்த நிலங்கள் குறித்த பதிவேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் முறைகேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

 மேலும் ஏற்கனவே வருவாய்த் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து நீதிபதி கோவில் குறித்த விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியதோடு யான திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கோரி உத்தரவிட்டார். 

Tags:    

Similar News