நீங்கள் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? வரி செலுத்த மீண்டும் கால அவகாசம் நீடிப்பு!!

By :  G Pradeep
Update: 2025-10-31 07:22 GMT

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய வரி துறை வரி செலுத்துவோருக்கு முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மத்திய நேரடி வரித்துறை வாரியம் தெரிவித்தபடி வருமான வரி அறிக்கைகள் மற்றும் ஆடிட் அறிக்கைகள் தாக்கல் செய்யும் கடைசி தேதி அக்டோபர் 31 வரையே தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் 10ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டு ஒரு மாத கால அளவு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

சில தொழில்நுட்ப சிக்கல்கள் வரி செலுத்துவோர்களுக்கும், கணக்காளர்களுக்கும் ஏற்பட்ட நிலையில் அதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆடிட் அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆக குறிப்பிட்ட நிலையில் அதன் பிறகு அக்டோபர் 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதிலும் தற்பொழுது மீண்டும் நீடிக்கப்பட்டு டிசம்பர் 10ஆம் தேதி வரை நிவாரணமாக காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தாமதமாக வரி செலுத்துவோருக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது. இதன் படி வர்த்தக நிறுவனங்கள் அல்லது ரூபாய் 10 கோடி வரை பரிமாற்றம் செய்பவர்கள் 5% கட்டாயமாக வரி செலுத்த வேண்டும் என்றும், தொழில்முறை நபர்களின் வருமானம் ரூ.50 லட்சத்தை மீறினால் அவர்களும் ஆடிட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செய்யத் தவறியவர்களுக்கு 271B சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குஜராத் ஹரியானா உட்பட பல மாநிலங்களின் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் படி எடுக்கப்பட்ட முடிவாகும். ஆடிட் அறிக்கைக்கும் ITR தாக்களுக்கும் இடையில் ஒரு மாத கால இடைவெளி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News