ஆப்ரேஷன் சிந்தூர் இப்படித்தான் நடத்தப்பட்டது!! ராணுவ தளபதி பேச்சு!!
By : G Pradeep
Update: 2025-11-02 14:48 GMT
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி மத்திய பிரதேசம் ரேவாவில் அவர் படித்த சைனிக் என்கின்ற பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஆப்ரேஷன் சிந்தூரில் தீவிரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தியதாகவும், பொதுமக்கள் இருக்கும் இடங்களையும், ராணுவ மையங்களையும் குறிவைத்து எந்த வித தாக்குதலும் நடத்தவில்லை என்று கூறினார்.
இது மட்டுமல்லாமல் தொழுகை நடக்கும் நேரங்களில் ராணுவ தாக்குதலை நடத்தவில்லை என்றும், அவர்களின் தரப்பில் வைத்த இலக்குகளை இதனால் அடைந்ததாகவும் கூறினார்.