பீகாரில் வாக்கு சேகரிப்பிற்கு சென்ற அமித்ஷா பேச்சு! விரைவில் வரப்போகும் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்!

By :  G Pradeep
Update: 2025-11-04 08:13 GMT

பீகார் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்காக பிஹாரின் சிவஹர், சீதாமரி போன்ற பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பதற்காக சென்று இருந்தார். 

அப்போது அவர், பீகாரில் வெள்ள பாதிப்புகள் மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை இருந்து வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்​டணி பீகாரில் ஆட்சி அமைத்தால் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

 பீகாரில் வேலை வாய்ப்புகள் அதிகமாகப்படுவதோடு மட்டுமல்லாமல், அம்மாநிலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வசதி அமைக்கப்படும். மேலும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்படும் என்றும், எல்லா மாவட்டங்களிலும் பூங்கா அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 இது மட்டுமல்லாமல் பீகாரில் நடக்கும் கடத்​தல், கொள்​ளை, கொலை, ஊழல் போன்றவை தடுக்கப்பட்டு அவற்றிற்காக தனித்தனியாக துறைகள் அமைக்கப்படும் என அமைச்சர் அமித்ஷா கூறினார். 

Tags:    

Similar News