கோடி கோடியாய் கொட்டும் பணம்!! இந்திய மகளிர் அணியினருக்கு குவிந்து வரும் பரிசுகள்!!

By :  G Pradeep
Update: 2025-11-04 13:43 GMT

ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற நிலையில் இந்திய அணிக்கு பலவிதமாக பரிசுகள் குவிந்து வருகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சாம்பியன் பட்டம் இந்திய அணி வென்ற நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ரூ.51 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

 இந்நிலையில் அவர் அளிக்கும் தொகையானது அணியில் இருக்கும் எல்லா வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய தேர்வுக்குழுவினருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சூரத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கோவிந்த் தோலாகியா சோலார் பேனல்கள் மற்றும் வைர நகைகள் பரிசு வழங்குவதாக பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.  

அது மட்டுமல்லாமல் இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா சிங் தாக்குருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை கிரந்தி கவுடுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News