பீகார் தேர்தலை முன்னிட்டு வெளியாகி இருக்கும் கருத்துக்கணிப்பு!!

By :  G Pradeep
Update: 2025-11-05 05:06 GMT

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக கருத்துக்கணிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த கருத்துக்கணிப்பின்படி பாஜக கட்சியானது 83 முதல் 87 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும், அக்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜேடியு 61 முதல் 65 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 

மேலும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவ்வின் ஆர்ஜேடி 63 முதல் 66 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியானது தனித்து 6 முதல் 7 தொகுதிகளை மட்டும் கைப்பற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

243 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஐஏஎன்எஸ், மேட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு முந்தைய கருத்தானது வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News