திமுகவின் மூத்த அமைச்சர் மீது விழுந்த மோசடி குற்றச்சாட்டு!! கோவிலில் தஞ்சமடைந்த அமைச்சர்!!
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக உள்ளாட்சி துறையின் உன் பணி நியமனத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பணியிடத்திற்கும் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தினால் மூத்த அமைச்சர் கே.என்.நேருக்கு இடையூறு ஏற்பட்டு இருப்பதாகவும், இத்தனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பாஜக திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்கி வருவதாகவும், அதில் முதல் தாக்குதல் தன் மீது நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையை பார்த்து எந்தவித பயமும் கிடையாது எனவும், இதை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார். மோசடி குறித்த தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில் தற்பொழுது கே.என்.நேரு சட்டநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.