நியூயார்க்கிற்கு இந்திய வம்சாவளியை சேர்த்த புதிய மேயர்!! அசத்துப்போன அமெரிக்கா!!
ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். என்னதான் அங்கு இவருக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது அதையும் மீறி வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்கு எண்ணிக்கை பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய பதவியேற்பு வரும் ஜனவரி 1ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இளம் நேராக பதவியேற்று இருக்கும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்த 34 வயது உடையவராவார். இவருடைய தந்தை எழுத்தாளரும், தாய் இயக்குனரும் ஆவர்கள்.
இத்தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கிய பிரச்சாரங்களாக இன வேறுபாட்டிற்கு எதிராக மாற்றம், இலவச குழந்தைகள் நலன், இலவச பேருந்து சேவை மற்றும் அரசு நடந்தும் மளிகை கடை என சிலவற்றை முன்னெடுத்துள்ளார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வரும் என்று பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் டிரம்ப் ஜோஹ்ரான் மம்தானி கம்யூனிஸ்ட் என நேரடியாக கூறி தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்தார்.
ஆனால் இந்த எதிர்ப்பை எல்லாம் உதறி தள்ளி ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்று நியூயார்க் மக்களுக்கு நம்பிக்கையையும், இருளை நீக்கி வெளிச்சத்தையும் அளிக்கப் போவதாக தெரிவித்தார். இவர் வெற்றியை வைத்து பார்க்கும் பொழுது ட்ரம் மீது அந்த நாட்டு மக்களின் அதிருப்தி வெளிப்படையாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ட்ரம்ப் இத்தேர்தலில் குடியரசு கட்சி தோற்றத்திற்கு காரணம் ட்ரம்ப் பெயர் பலோட்டில் இல்லை என்பதும், அமெரிக்காவில் அரசு நிர்வாகம் மூடப்பட்டிருப்பதும்தான் என கூறியுள்ளார்.