பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து பயந்த திமுக!! ஓபன் ஆக முதல்வர் கொடுத்த அசைன்மென்ட்!!
இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கும் நிலையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்தக் கூட்டணியால் அச்சம் அடைந்து 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை முதல்வர் மு க ஸ்டாலின் ஒன் டு ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பில் திமுகவின் மாவட்ட செயலாளர்களில் தொடங்கி கிளை கழக செயலாளர்கள் வரை அனைவரையும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ள நிர்வாகிகளை தனி தனியாக முதலமைச்சர் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் நிர்வாகிகளிடம் அரசின் சாதனை திட்டங்கள் என்னென்ன? தேர்தலை முன்னிட்டு தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்த ஆலோசனையானது தொடங்கி 33 நாட்களில் 73 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட நிலையில் நெல்லை மற்றும் சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று நடத்தப்பட்ட ஆலோசனையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அப்படி நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பதவிகளும் பறிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.
நெல்லைப் பகுதியில் ஏற்கனவே தமிழக பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணியை பார்த்து பயந்து மீண்டும் தொகுதி கைமிரி போய்விடுமோ என்று நினைத்து இவ்வாறு கூறி இருக்கலாம் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.