இந்திய தேர்தல் முறையை பார்ப்பதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து வர போகும் எம்.பி.க்கள் குழு!!

By :  G Pradeep
Update: 2025-11-07 12:11 GMT

தேர்தல் ஆணையம் ஆனது இந்திய தேர்தலை பார்ப்பதற்கு தென்னாப்பிரிக்கா எம்.பி.க்கள் விரும்புவதாக கூறியது.

 மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணைய தலைவர் மொசோதோ மோப்​யா தொலைபேசி மூலம் பேசியதாகவும், பீகாரில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிய வாழ்த்து தெரிவித்ததாகவும், திறன் வாய்ந்த மற்றும் வெளிப்படையான தேர்தல் முறையினை அறிந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்காவின் எம்.பி.க்கள் விரைவில் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக கூறினார். 

ஏனெனில் தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்றமும் இந்தியாவின் நாடாளுமன்றம் போல தேசிய அவை மற்றும் தேசிய மாகாண கவுன்சில் அவை என இரண்டு உள்ளது. அதனால் தென்னாப்பிரிக்காவின் எம்.பி.க்கள் இங்கு நடக்கும் தேர்தலை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News