ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக வைத்த குற்றச்சாட்டு!! மறுப்பு தெரிவித்த ஆளுநர் மாளிகை!!
கடந்த சில காலமாக தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று திமுக அரசு தொடர்ச்சியாக கூறிவந்தது. இது மட்டுமல்லாமல் ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படவில்லை என்றும், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஆளுநர் 81% அளவிற்கு பெறப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், கடைசியாக முடிந்த மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், ஆளுநர் மாளிகை சார்பாக கூறி தமிழக அரசு கூறுவது தவறான தகவல் என்றும், ஆதாரமற்றவை என்றும் கூறப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்பட்டு வருவதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடன் மசோதாக்களை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் ஆளுநர் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும், அரசியலமைப்பு கடமைகளை செய்து வருவதாகவும், தமிழக அரசு ஆளுநர் மசோதாக்களுக்கு காலம்தாழ்த்துவதாக கூறியதை ஆர்.என்.ரவி அதை மறுத்துள்ளார்.