குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள்!!
By : G Pradeep
Update: 2025-11-08 09:05 GMT
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இருக்கும் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ஊடுருவல் முயற்சி நடந்த நிலையில், பயங்கரவாதிகள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். உளவுத்துறை அளித்த தகவலின் படி குப்வாராவின் கெரான் செக்டாரில் நவம்பர் 7ஆம் தேதி தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் அதற்கு பாதுகாப்பு படையினர் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த இரண்டு பயங்கரவாதிகளும் யார் என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பகுதியில் தேடுதல் பணியை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.