தென் மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு காரணம் அப்பாவு தான்!! திலகபாமா பேச்சு!!

By :  G Pradeep
Update: 2025-11-08 16:30 GMT

தென் மாவட்ட பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிம வளக் கொள்கையை கண்டித்து தென்காசி மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தின் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இப்போராட்டத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்று கனிம வள கொள்கைக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு பாஜகவினர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று கனிமவளக் கொள்ளைக்கு திமுகவினர் முக்கிய காரணம் என்றும், தென் மாவட்டங்களில் ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கனிம வளங்களை கொள்ளையடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தென் மாவட்டங்களில் இருந்து கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News