எஸ்ஐஆர் படிவங்களை விநியோகிக்கும் போது வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்!!
கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி வீடு வீடாக அதிகாரிகள் சென்று எஸ்ஐஆர் படிவங்களை வாக்காளர்களிடம் விநியோகித்து வருகின்றனர். இந்த பணியானது மாவட்ட வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ், இயக்குனர் கே.கே.திவாரி மற்றும் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி அர்ச்சனா ஆகியோர் திருவண்ணாமலையில் நேற்று ஆய்வு நடத்தி பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்தனர்.
வாக்காளர்கள் பணிகளுக்கு சென்று விட்டால் அலுவலகப் பணி முடிந்த பிறகு பிஎல்ஓ-க்களும் அரசு ஊழியர்கள் அவர்களை சந்திக்க சென்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் படிவம் நிரப்பும் பணியில் ஈடுபடுவதால் எந்த இடையூறுகளும் இருக்காது என்று கூறினர்.
மேலும் எஸ்ஐஆர் செயலி மூலம் வாக்காளர்கள் குடிபெயர்ந்ததை பதிவு செய்து டிசம்பர் 9ஆம் தேதி முதல் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் படிவம் 6 பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ள முடியும் என்பதால் வீடு மாதிரி இருப்பவர்கள் எந்தவித கவலையும் பட தேவையில்லை. படிவத்தில் ஏதேனும் தவறாக எழுதிவிட்டால் அதனை அடித்து சரி செய்து கொள்ளலாம். புதிய படிவங்கள் அழிக்கப்பட மாட்டாது. இந்த படிவத்தை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில் ஏதேனும் தவறு நடைபெற்றால் பிஎல்ஓ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்ப வடிவத்தை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டையிலும் வாக்காளர் அட்டையிலும் ஒரே பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் யாரேனும் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு வழங்கலாம் என பல பொதுமக்கள் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்துள்ளனர்.