ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக பீகார் மாற்றப்படும்!! அமித்ஷா உறுதி!!
By : G Pradeep
Update: 2025-11-09 08:27 GMT
வரும் 11ம் தேதி பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தல் 122 பேரவை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கடிஹாரில் என்டிஏ சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது பீகாரில் ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதற்காக லாலுவும் ராகுல் காந்தியும் பேரணியை தொடங்கியுள்ளனர். சீமாஞ்சலை ஊடுருவல்காரர்களின் கோட்டையாக மாற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் சீமாஞ்சலில் இருந்து ஊடுருவல் காரர்களை வெளியேற்றி ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக பீகாரை மாற்றுவோம் என்று அமித்ஷா கூறினார்.