தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பீகாரில் மாபெரும் கட்சியாக உருவெடுக்க போகும் பாஜக!!
எக்ஸிட் கருத்து கணிப்பானது உண்மையாக இருந்தால் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிகாரில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அங்கு பாஜக பெரிய கட்சியாக இடம் பிடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் பாஜகவானது என்டிஏ கூட்டணியில் மிகவும் நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருத்து கணிப்பில் பாஜக 67 முதல் 70 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் படி கடந்த 2020 ஆம் ஆண்டு லாலு பிரசாந்த் யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தளமானது போட்டியிட்ட 69 இடங்களை விட அதிகம் என்றும், அதற்கு அதிகமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பானது மிகவும் சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது.
ஏற்கனவே பிஹாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் சில தவறுகள் நிரூபனமாகியுள்ளது. ஆனால் தைனிக் பாஸ்கர், மேட்ரிக்ஸ், பீப்பிள்ஸ் இன்சைட், சாணக்யா உத்திகள் போன்றவற்றில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் 130 முதல் 167 வரை புள்ளி விபரங்கள் என்டிஏ வெற்றியை சரியாக கனித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சராசரி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் விவரத்தின்படி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 147 இடங்களைப் பெற்றும், மகா கூட்டணியானது 90 இடங்களை பெற்றும் இருக்கும் என கூறப்படுகிறது.