சில்லறை பணவீக்கம் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!!
By : G Pradeep
Update: 2025-11-13 14:13 GMT
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 1.54% ஆக நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இருந்த நிலையில் பல்வேறு வகையான பொருள்களுக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை (GST) வரியானது குறைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உணவு பொருள்களின் விலைகளும் மிகவும் குறைய தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபரில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இதுவரை இல்லாத வகையில் 0.25% குறைந்தது.
கடந்த நான்கு மாதங்களாக பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% குறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.