கட்சியின் கட்டமைப்பில் தான் பிரச்சனை!! காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!!

By :  G Pradeep
Update: 2025-11-15 08:15 GMT

பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு நேற்று நடைபெற்ற நிலையில் காலை 6:00 மணி அளவில் 203 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருந்தது. அதுபோக 34 இடங்களில் மட்டுமே மகாபந்தன் கூட்டணி முன்னிலையில் இருந்தது. இதை வைத்து பார்க்கும் பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இது சமூக நீதியின் வெற்றி என்றும், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்றும் பதிவு செய்திருந்தார். 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும், கேரளா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநரான நிகில் குமார் இது முழுக்க முழுக்க கட்சி கட்டமைப்பின் தோல்வி என்று கூறியிருக்கிறார். இது கட்சியின் கட்டமைப்பு பலவீனத்தை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் கட்சியின் கட்டமைப்பு மிகவும் முக்கியம். 

அப்படிப்பட்ட கட்சியின் கட்டமைப்பு பலமானதாக இல்லாவிட்டால் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு செயல்பட முடியாது என்றும், எல்லாவற்றையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியில் இருக்கும் அனைத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள் என்றும் ஆனால் இன்னும் சிறப்பான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

எனவே இந்த தோல்வியானது முழுக்க முழுக்க கட்டமைப்பு தோல்வி என்றும், கட்டமைப்பு வலுவானதாக இருந்திருந்தால் இந்நேரம் வேட்பாளர்களின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News