டெல்லி கார் கொண்டுவெடிப்பில் உளவுத்துறை பின்பற்றும் யுக்தியை போல செய்திகளை பரிமாறிக் கொண்ட தீவிரவாதிகள்!

By :  G Pradeep
Update: 2025-11-16 11:50 GMT

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக மருத்​து​வர்​கள் முஜம்​மில் ஷகீல், ஆதில், ஷாஹீத் சயீத் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்தனர். 

இதில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்காக டெட் டிராப் எனப்படும் ஈமெயில்களை பயன்படுத்தி இருப்பது என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரே ஈமெயில் முகவரியை பாஸ்வேர்டை பயன்படுத்தி அனைத்து தீவிரவாதிகளும் ஓபன் செய்து அதில் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஈமெயிலில் டைப் செய்து விட்டு மெயிலை அனுப்பாமல் அப்படியே வைத்து விடுகின்றனர். 

மற்றவர்கள் அந்த மெயிலை ஓபன் செய்து பார்க்கும் பொழுது அனுப்பாமல் இருக்கும் செய்தியை படித்து தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனை டெட் டிராப் ஈமெயில் என்று அழைக்கின்றனர். இந்த முறை பொதுவாக உளவுத்துறை பின்பற்றக் கூடியதாகும். ஆனால் இந்த முறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர் உமர் புகைப்படம் தற்பொழுது போலீசார் வெளியிட்டுள்ளனர். ஹரியானாவில் இருக்கும் ஒரு கடையிலிருந்து கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில் அவருடைய முகம் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News